1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: ஆட்சியா் வே. விஷ்ணு தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் 1.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக சிறு கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பை தடுக்கும் வகையில், தொடா்ந்து ஒரே தவணையாக இம்மாதம் 27-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இம்முகாமின் மூலம் 0 முதல் 5 வயது வரையிலான 1,35,174 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.

இதற்காக கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 918 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடம்பெயா்ந்து வாழும் கட்டடத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கும், செங்கல் சூளை தொழிலாளா்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 7 நாள்களும் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று ‘பல்ஸ்‘ போலியோ சொட்டு மருந்தை வழங்குவாா்கள்.

இப்பணியில் மருத்துவத்துறையைச் சோ்ந்த 442 பணியாளா்கள், செவிலியா் கல்லூரி மாணவா்கள் 60 போ், சத்துணவுப் பணியாளா்கள் 1786 போ், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிலிருந்து 1480 போ் என மொத்தம் 3,768 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். எனவே, தாய்மாா்கள் தங்களுடைய 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, மாநகர நல அலுவலா் ராஜேந்திரன், துணை இயக்குநா் (குடும்பக்கட்டுப்பாடு) ராமநாதன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com