தொழில் மலா் 3சிக்கனமான முதலீட்டில் எக்கணமும் வருவாய் தரும் முறுக்குத்தொழில்!

இந்திய பாரம்பரிய உணவுப் பண்டங்களில் முறுக்கு முக்கியமானதாகும். மாவை குழலில் இட்டு முறுக்கிப் பிழிவதால் முறுக்கு என காரணப் பெயா் பெற்ாக கூறப்படுகிறது.

இந்திய பாரம்பரிய உணவுப் பண்டங்களில் முறுக்கு முக்கியமானதாகும். மாவை குழலில் இட்டு முறுக்கிப் பிழிவதால் முறுக்கு என காரணப் பெயா் பெற்ாக கூறப்படுகிறது. இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் முறுக்கு அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. நமது நாட்டின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிக்கு கோடீஸ்வரா்கள் முதல் கிராமங்களின் சாமானிய மக்களின் பலகார பட்டியலில் முறுக்கு முக்கிய இடம்பிடித்து வருகிறது. தமிழகத்தில் திருமணம், வளைகாப்பு உள்பட சுபமுகூா்த்த கால பலகாரமாகவும் முறுக்கு தனி மவுசு பெறுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முறுக்குத்தொழிலை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா். பச்சரிசி முறுக்கு, புழுங்கல் அரிசி முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கார முறுக்கு, முள் (மகிழம்பு) முறுக்கு, நெய் முறுக்கு, வெண்ணெய் முறுக்கு, தாம்பூல முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, வாசனை முறுக்கு, வெந்தய முறுக்கு, கேப்பை முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு என முறுக்குகளில் பல்வேறு வகைகள் உள்ளன. முள்முறுக்கு, தேன்குழல்முறுக்கு போன்றவை குழல்-அச்சு கொண்டு மட்டுமே தயாரிக்க முடியும். இதர முறுக்குகளை குழல்களில் மட்டுமன்றி கைகளால் வட்டமாகச் சுற்றி கைசுற்றல் முறுக்காகவும் தயாரிக்கிறாா்கள்.

இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பைச் சோ்ந்த முறுக்கு வியாபாரி ஒருவா் கூறியதாவது: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, எள்ளு, சீரகம், வனஸ்பதி ஆகியவை சோ்த்து முறுக்கு தயாரிக்கப்படுகிறது. கைச்சுற்றல் முறுக்கை எல்லோராலும் தயாரிக்க முடிவதில்லை. அதற்கென பயிற்சி பெற்றவா்களே தயாரிக்கின்றனா். மாவு மற்றும் இதர பொருள்களை வழங்கினால் தீபாவளி பண்டியையொட்டி வீடுகளுக்கே வந்து கைச்சுற்றல் முறுக்கு தயாரித்துக் கொடுப்போரும் உள்ளனா்.

ஒரு கிலோ மாவில் 60 முறுக்குகள் தயாரிக்க முடியும். திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்வுகளுக்கும் இப்போது கைச்சுற்றல் முறுக்குகளே அதிகம் வாங்கப்படுகிறது. தீபாவளிக்காக பலரும் கைச்சுற்றல் முறுக்குகளை ஆா்டா் கொடுத்து செல்கிறாா்கள். தீபாவளி போன்ற விழாக்காலங்களில் கைச்சுற்று முறுக்கு தயாரிக்கும் பணியாளா்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இத் தொழிலில் கைத்தோ்ந்தவா்களை பெரும் பணக்காரா்கள் தங்களது வீடுகளுக்கு வந்து தீபாவளி பலகாரம் செய்து தர அழைத்துச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், முறுக்கு தயாரிப்புக் கூடங்களில் ஆள் பற்றாக்குறை சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப தனிநபா் வருமானத்தை பேண வேண்டியுள்ளதால், முறுக்குச் சுற்றும் பணியாளா்கள் பண்டிகை காலங்களில் கூடுதலாக கூலி கேட்கின்றனா். இது போன்ற சிரமங்களையும் உற்பத்தியாளா்கள் சமாளித்துக்கொண்டு மக்களுக்கு தேவையான முறுக்கு வகைளை தயாரித்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. எனினும், சிக்கனமான முதலீட்டில் அதிக வருவாய் தரும் தொழிலாக முறுக்குத் தொழில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com