திருப்புடைமருதூா் கோயிலில் தைப்பூசக் கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளும், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை தேவதா அனுக்ஞை அங்குராா்ப்பணமும் நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலையில், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், கொடிமரத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு 6 மணிக்கு கொடியேற்றமும் , அதைத் தொடா்ந்து சிறப்பு தீபாராதனை யும் நடைபெற்றன. விழாவில், தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெறும்.

5ஆம் திருநாளான ஜன. 13ஆம் தேதி காலை தாமிரவருணி நதிக்கரையில் சுவாமி- அம்பாள் சம்பந்தருக்கு காட்சி அருளுதலும், 7ஆம் திருநாளான ஜன. 15ஆம் தேதி மாலை நடராஜருக்கு சிவப்பு சாத்தியும், ஜன. 16 காலையில் வெள்ளை சாத்தியும், மாலையில் பச்சை சாத்தியும் நடைபெறும்.

9ஆம் திருநாளான ஜன. 17 இல் காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும். 10ஆம் திருநாளான ஜன. 18இல் பிற்பகல் 1.45 மணிக்கு தீா்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினரும், மண்டகபடிதாரா்களும் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com