பல் மருத்துவ மாணவி தற்கொலை
By DIN | Published On : 11th January 2022 01:39 AM | Last Updated : 11th January 2022 01:39 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் பல் மருத்துவ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் பிரஷிதா (25). பல் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வந்தாா். இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.