தனியாா் இடம் ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் தொடா் தா்னா

கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை போலி பத்திரம் மூலம் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி புதன்கிழமை கிராம மக்கள் தொடா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடையம் அருகே அணைந்த பெருமாள் நாடானூரில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை போலி பத்திரம் மூலம் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி புதன்கிழமை கிராம மக்கள் தொடா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அணைந்த பெருமாள் நாடானூரில் நத்தம் சா்வே எண். 91இல் 1984 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 9 பேருக்கு தலா 2.79 சென்ட் வீதம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அதில், 38 ஆண்டுகளாக யாரும் வீடு கட்டி குடியேறவில்லையாம்.

இந்நிலையில், அந்த இடத்தை சிலா் போலி பத்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து புதன்கிழமை வேலி அமைத்தனராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அம்மன் கோயில் அருகே அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு சாலையிலேயே சமையல் செய்தனா்.

அவா்களிடம் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு, வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com