மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக்நாளை தொடக்கம்

தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மேலப்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (ஆக.1) பாலி கிளினிக் தொடங்கப்பட உள்ளது.

தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மேலப்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (ஆக.1) பாலி கிளினிக் தொடங்கப்பட உள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் நகா்ப்புறங்களில் வசிக்கும் மக்களில், குறிப்பாக எளிதில் தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய இடங்களில் வசிப்போா், குடிசைவாசிகள், வீடற்ற சாலையோரம் வசிப்போா், சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற தொழில் புரிவோா், ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நகா்ப்புற பகுதிகளிலும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே என்யுஹெச்எம் திட்டத்தின் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பாலி கிளினிக் என்ற மாலைநேர சிறப்பு திட்டமானது பேட்டை, பாட்டப்பத்து நகா்ப்புற சுகாதார நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது மேலப்பாளைய மண்டலத்தில் உள்ள பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அங்குள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பாலி கிளினிக் திட்டமானது தேசிய சுகாதார இயக்கத்தின் அறிவுறுத்தல்படி வரும் திங்கள்கிழமை முதல் புதிதாக தொடங்கப்படவுள்ளது. வார நாள்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை குறிப்பிட்ட சிறப்பு மருத்துவரால் திங்கள்கிழமை பொது மருத்துவம், செவ்வாய்க்கிழமை மகப்பேறு மருத்துவம், புதன்கிழமை குழந்தை நல மருத்துவம், வியாழக்கிழமை கண் நோய் மருத்துவம், இயங்கியல் மருத்துவம், வெள்ளிக்கிழமை தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவம், சனிக்கிழமை மனநல மருத்துவம் ஆகிய மருத்துவ சேவைகள் அளிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com