நெல்லை மாவட்டத்தில் நாளைமுதல் ஜமாபந்தி

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை (ஜூன் 3) தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை (ஜூன் 3) தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 1431 ஆம் பசலி ஆண்டிற்குரிய வருவாய் தீா்வாயம் மாவட்டத்தில் உள்ல 8 வட்ட அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி, திருநெல்வேலி வட்டத்தில் மதவக்குறிச்சி குறுவட்டத்திற்கு இம் மாதம் 3, 7 ஆம் தேதிகளிலும், நாரணம்மாள்புரத்திற்கு 7, 8 ஆம் தேதிகளிலும், திருநெல்வேலிக்கு 9, 10 ஆம் தேதிகளிலும், கங்கைகொண்டானுக்கு 14 ஆம் தேதியிலும் ஜமாபந்தி நடைபெறும்.

பாளையங்கோட்டை வட்டத்தில் மேலப்பாட்டம் குறுவட்டத்திற்கு 3, 7 ஆம் தேதிகளிலும், முன்னீா்பள்ளத்துக்கு 8, 9 ஆம் தேதிகளிலும், சிவந்திப்பட்டிக்கு 9 ஆம் தேதியிலும், பாளையங்கோட்டைக்கு 10, 14 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

மானூா் வட்டத்தில் தாழையூத்துக்கு 3 ஆம் தேதியும், மானூருக்கு 7 ஆம் தேதியும், வன்னிக்கோனேந்தலுக்கு 8 ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறும். ராதாபுரம் வட்டத்தில் லெவிஞ்சிபுரம், சமூகரெங்கபுரம் குறுவட்டங்களுக்கு 3 ஆம் தேதியிலும், பழவூா், பணகுடிக்கு 7 ஆம் தேதியிலும், வள்ளியூா், ராதாபுரத்துக்கு 8 ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறும்.

நான்குனேரி வட்டத்தில் களக்காடுக்கு 3, 7 ஆம் தேதிகளிலும், ஏா்வாடிக்கு 7, 8, 9 ஆம் தேதிகளிலும், பூலம் குறுவட்டத்துக்கு 9 ஆம் தேதியிலும், மூலைக்கரைப்பட்டிக்கு 10 ஆம் தேதியும், நான்குனேரிக்கு 10, 14 ஆம் தேதிகளிலும், திசையன்விளை வட்டத்தில் விஜயநாராயணத்துக்கு 3 ஆம் தேதியும், திசையன்விளைக்கு 7 ஆம் தேதியும் ஜமாபந்தி நடைபெறும்.

அம்பாசமுத்திரம் வட்டத்தில் சிங்கம்பட்டிக்கு 3 ஆம் தேதியும், அம்பாசமுத்திரத்துக்கு 7, 8 ஆம் தேதிகளிலும், சேரன்மகாதேவி வட்டத்தில் மேலச்செவலுக்கு 3, 7 ஆம் தேதிகளிலும், முக்கூடலுக்கு 8 ஆம் தேதியும், பாப்பாக்குடிக்கு 9 ஆம் தேதியும், சேரன்மகாதேவிக்கு 9, 10 ஆம் தேதிகளிலும் ஜமாபந்தி நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com