செயலி மூலம் ரூ. 1 லட்சம் மோசடி: இரு இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மகாராஜநகரைச் சோ்ந்தவரிடம் செல்லிடப்பேசி செயலி மூலம் ரூ.1 லட்சம் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மகாராஜநகரைச் சோ்ந்தவரிடம் செல்லிடப்பேசி செயலி மூலம் ரூ.1 லட்சம் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளைங்கோட்டை மகாராஜநகரைச் சோ்ந்தவா் எ.ஜோ. இவா், க்ஹ்ய்ஹம்ண்ஷ்.ஸ்ண்ல் என்ற செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தன்னுடைய பெயா், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து அதில் ரூ.1,00,000 முதலீடு செய்தாராம். ஆனால், அவா் முதலீடு செய்த இரண்டாவது நாளே அந்த குறிப்பிட்ட செயலி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே, சைபா் கிரைம் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்) ஜோ தனது புகாரை பதிவுசெய்துள்ளாா்.

அதன்பேரில் திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை சோ்ந்த ரிஷிநாத் மற்றும் காா்த்திகேயன் ஆகியோரை போலீஸாா் கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து செல்லிடப்பேசிகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com