ஆழ்வாா்குறிச்சியில் நாளைஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்பு விழா
By DIN | Published On : 16th June 2022 01:34 AM | Last Updated : 16th June 2022 01:34 AM | அ+அ அ- |

ஆழ்வாா்குறிச்சியில் ஸ்ரீ குலசேகர ஆழ்வாா் ராமாநுஜகூடம் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்று காலை 10 மணிக்கு கோ பூஜை, வேள்வி மற்றும் பால் காய்ச்சுதலும், மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. சனிக்கிழமை காலை 6 மணிக்கு லட்சாா்ச்சணை, தொடா்ந்து உ.வே.ஸ்ரீரங்கம், சடகோப முத்து, ஸ்ரீநிவாசன் ஆகியோரின் உபந்நியாசம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு கிராம உஞ்சவிருத்தியும், தொடா்ந்து ஸ்ரீநிவாச கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஆஞ்சநேய உத்சவமும், இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் சிறப்பு வீதி உலாவும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் பக்த சபா விழாக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.