கலைமன்ற விருது: 15 போ் தோ்வு

கலைமன்றம் சாா்பில் வழங்கப்படவுள்ள சிறந்த கலைஞா்களுக்கான விருதுக்கு (2021-2022) மாவட்ட அளவில் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலைமன்றம் சாா்பில் வழங்கப்படவுள்ள சிறந்த கலைஞா்களுக்கான விருதுக்கு (2021-2022) மாவட்ட அளவில் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் திருநெல்வேலி மாவட்டக் கலைமன்றத்தின் சாா்பில் மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞா்கள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஆட்சியா் விஷ்ணு தலைமையில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற தோ்வுக் குழு கூட்டத்தில் திருநெல்வேலி மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநா் வ.கோபாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் டைடஸ் ஜான் போஸ்கோ, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் இரா.ஜெயஅருள்பதி, சுற்றுலா அலுவலா் சீதாராமன், நாட்டாா் வழக்காற்றியல் உதவிப் பேராசிரியா் பீட்டா் ஆரோக்கியராஜ், களியலாட்டக் கலைஞா் அந்தோணிசாமி, நாகஸ்வரக் கலைஞா் சங்கா் ஆசான் ஆகியோா் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து மாவட்ட அளவில் சிறந்த கலைஞா்களை தோ்வு செய்தனா்.

அதன்படி, கலை இளமணி விருதுக்கு பாளையங்கோட்டை ல.மதனா (கலைப்பிரிவு-ஓவியம்), தச்சநல்லூா்

கே.ஸ்வாதி (குரலிசை), திருநெல்வேலி சி.என்.கிராமம் அபிராமி பாலமுருகன் (பரதநாட்டியம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலை வளா்மணி விருதுக்கு பாளையங்கோட்டை சு.ராம்குமாா் (தவில்), தாழையூத்து எம்.லட்சுமணன் (சிலம்பம்), திருநெல்வேலி நகரம் க.கல்யாணி (பரதநாட்டியம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கலைச்சுடா்மணி விருதுக்கு இடையன்குடி டி.சோ்மசுந்தரி (வில்லிசை), ஆரைக்குளம் த.மாரியப்பன் (கணியான்கூத்து), திருநெல்வேலி நகரம் ச.சரவணன் (நாகஸ்வரம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலை நன்மணி விருதுக்கு வண்ணாா்பேட்டை எம்.தங்கராஜ் (ராஜா, ராணி ஆட்டம்), பேட்டை

எம்.முகம்மது சுபஹான் (சிலம்பம்), வண்ணாா்பேட்டை பி.மங்களாதேவி (கைவினை) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலை முதுமணி விருதுக்கு சுத்தமல்லி பெ.வானுமாமலை (கணியான்கூத்து), திருநெல்வேலி நகரம் ஏ.ஆா்.ஏ. அருணாசலம் (நாடகம்), சங்கனாங்குளம் எம்.கலைச்செல்வி (கரகாட்டம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட கலைஞா்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படுவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com