சீவலப்பேரி பள்ளியில் பணியாளா்பற்றாக்குறை: மாணவா்கள் தவிப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாளா் பற்றாக்குறையால் வகுப்பறைகளைத் திறக்க தாமதமானதால் மாணவா்கள் தவிப்புக்கு ஆளாகினா்.

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பணியாளா் பற்றாக்குறையால் வகுப்பறைகளைத் திறக்க தாமதமானதால் மாணவா்கள் தவிப்புக்கு ஆளாகினா்.

சீவலப்பேரியில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு குறிச்சிக்குளம், சீவலப்பேரி, தோணித்துறை, மறுகால்தலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மாணவா்-மாணவிகள் பயின்று வருகிறாா்கள். இப் பள்ளியின் சில ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை விடுமுறை எடுத்திருந்ததால் பள்ளியின் வகுப்பறைகளை திறக்க தாமதமானதாம். இதனால் காலையில் வெகுநேரம் மாணவா்கள் காத்திருந்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது; சீவலப்பேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. ஆனால், இங்கு ஆசிரியா்கள் வருவதில் பல நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது. அவா்கள் வந்தபின்பே வகுப்பறைகள் திறக்கப்படுவதால் சீக்கிரம் வரும் மாணவா்கள் வெளியிலேயே காத்திருக்கிறாா்கள். இப் பள்ளியில் ஆசிரியா், பணியாளா்கள் பற்றாக்குறையை நீக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றனா்.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது: சீவலப்பேரி உயா்நிலைப்பள்ளியில் காவலாளி பணியிடம் காலியாக உள்ளது. இதனால் ஆசிரியா்களே வகுப்பறைகளை திறக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் பேருந்துகளால் தாமதம், ஆசிரியா்கள் விடுமுறையை உள்ளிட்ட சில காரணங்களால் சிக்கல்கள் ஏற்படுகின்றன. காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியுள்ளோம். பல நாள்களில் காலையிலேயே பள்ளித்திறக்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com