புத்தகக் கண்காட்சியில் புகைப்பட பயிற்சி வகுப்பு

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான புகைப்பட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான புகைப்பட பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் பொருநை - நெல்லை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 8ஆவது நாளாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியின் சிறப்பு நிகழ்வாக, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு புகைப்படக் கலை பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியை, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தொடங்கிவைத்தாா். புகைப்பட கலைஞா் ரோகிணி முத்துராம் பயிற்சி அளித்தாா். புகைப்பட கருவிகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கப் பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து 9ஆவது நாள் புத்தகக் கண்காட்சியில் கழிவுப் பொருள்களை கொண்டு அழகிய கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது; இதில், அனைவரும் பங்கேற்கலாம் என அருங்காட்சியக காப்பாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com