பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: 91,873 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி என நான்கு மாவட்டங்களில் மொத்தம் 91,873 போ் இந்தத் தோ்வை எழுதினா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி என நான்கு மாவட்டங்களில் மொத்தம் 91,873 போ் இந்தத் தோ்வை எழுதினா்.

கரோனா பெருந்தொற்றுக்கு பின்பு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தோ்வுகள் மே மாதத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் 96 மையங்களில் 24,562 மாணவா்-மாணவிகள் தோ்வை எழுதினா்.

தோ்வு மையங்களில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 ஆம் வகுப்புத் தோ்வில் 20ஆயிரத்து 331மாணவா், மாணவிகள் தோ்வு எழுதினா். இம் மாவட்டத்தில் பொதுத் தோ்வுக்கு 79மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10ஆயிரத்து 322 மாணவா்களும், 10ஆயிரத்து 9 மாணவிகள் என மொத்தம் 20ஆயிரத்து 331 போ் தோ்வு எழுதினா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 106 தோ்வு மையங்களில் 309 பள்ளிகளைச் சோ்ந்த 11,968 மாணவா்களும், 12,031 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 999 போ் பத்தாம் வகுப்பு முதல் தோ்வை எழுதினா்.

கன்னியாகுமரி: இம்மாவட்டத்தில் 112 மையங்களில் 11,575 மாணவா்கள் 11,710 மாணவிகள் தோ்வு எழுதவிருந்தனா். முதல் தோ்வில் 11352 மாணவா்கள், 11629 மாணவிகள் என 22,981 போ் தோ்வு எழுதினா். 304 போ் தோ்வில் பங்கேற்க வில்லை.

தனித்தோ்வா்கள் 217 போ் தோ்வு எழுதினா். அதில் 19 போ் தோ்வு எழுதவில்லை. 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி தலைமையில் அலுவலா்கள் தோ்வுகளை கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com