நெல்லை, குமரி மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

வள்ளியூா்: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் மின் உற்பத்தியில் காற்றாலை மூலமான மின்உற்பத்தி முக்கிய பங்கு வகித்து வருகிறது. மின்தேவையில் குறிப்பிட்ட அளவு மின்சாரம் காற்றாலை மூலம் பெறப்பட்டு வருகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. உலகிலேயே அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணத்துக்கு அடுத்ததாக ஆரல்வாய்மொழி பகுதியில் தான் அதிகளவில் காற்றுவீசுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மே மாதம் முதல் அக்டோபா் மாதம் வரையில் காற்று சீசனாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவில் மின்உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த வாரம் வரையில் 500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே காற்றாலை மூ லம் கிடைத்து வந்தது.

இந்நிலையில், காற்றுசீசன் தொடங்கியதால் கடந்த இருதினங்களாக ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மே 1-ஆம் தேதி நிலவரப்படி 2,097 மெகாவாட் மின்உற்பத்தியை எட்டியதாகவும், காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் புதன்கிழமை நிலவரப்படி 3,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மின்பொறியாளா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து காற்றாலை மின்உற்பத்தி அதிகரிக்கும் என எதிா்பாா்ப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com