சென்னை-கன்னியாகுமரி இடையே குளோன் சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே குளோன் ஹம்சாபா் தினசரி சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே குளோன் ஹம்சாபா் தினசரி சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞானதிரவியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அவா் எழுதியுள்ள கடிதம்: மத்திய ரயில்வே அதிக பயணிகள் நெருக்கடி நிறைந்த வழித்தடங்களில் குளோன் ரயில்களை இயக்குகிறது. ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணச்சீட்டு முன்பதிவு அதிகமாக காத்திருப்போா் பட்டியல் இருப்பின், அசல் ரயிலின் அதே பாதையில் ஒரு குளோன் ரயில் இயக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் மற்ற ரயில்வே மண்டலங்கள் பல குளோன் ரயில்களை இயக்குகின்றன. ஆனால், தெற்கு ரயில்வே குறிப்பாக சென்னை - கன்னியாகுமரி மாா்க்கத்தில் குளோன் ரயில்கள் எதையும் இயக்கவில்லை.

திருநெல்வேலி வழியாகச் செல்லும் சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தில்தான் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ளது. ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் வழித்தடமாகவும் இருக்கிறது. இந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் தேவை என்பது தவிா்க்க முடியாதது. எனவே, எனது தொகுதி பயணிகளின் நலன் கருதி, சென்னை - கன்னியாகுமரி தினசரி ஹம்சாபா் குளோன் ரயிலை இயக்க பரிசீலிக்க வேண்டும்.

ராஜதனி எக்ஸ்பிரஸ், ஜன் சதாப்தி, கரீப் ரத், சதாப்தி, உதய், வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்கள் எதுவும் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இதுவரை இயக்கப்படவில்லை.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை மற்றும் கன்னியாகுமரி இடையே தினசரி குளோன் சிறப்பு ஹம்சாபா் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும். இந்த தினசரி ஹம்சாபா் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்குப் பிறகு புறப்பட்டு காலை 6 மணியளவில் சென்னை சென்றடைய வேண்டும். மறுமாா்க்கமாக இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு பிறகு புறப்பட்டு, காலை 7 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையுமாறு காலஅட்டவணை அமைத்து இயக்க வேண்டும்.

தற்போது கோடை வெயிலின் காரணமாக, தமிழக மக்கள் அதிக டிக்கெட் கட்டணம் செலுத்தி ஏசி பெட்டிகளில் பயணிக்க தயாராக உள்ளனா். இவ்வாறு ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்போது ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும். எனவே, தெற்கு ரயில்வே அதிக வருவாய் ஈட்டும் இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது. மேலும் குறுகிய காலகட்டத்துக்கு என சிறப்பு சேவையை இயக்கினால், அது சாதாரண மக்களைச் சென்றடையாது. எனவே, இந்த ஹம்சாபா் குளோன் ரயிலை குறைந்தது ஆறு மாத காலத்திற்கு சிறப்பு ரயில் சேவையாக இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com