மதுரா கோட்ஸ் ஆலைக்கு ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறையாக அறிவிப்பு

பாபநாசம், மதுரா கோட்ஸ் ஆலை வாரத்தில் 6 நாள்கள் மட்டும் இயங்கும், ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையென்றும் அறிவித்துள்ளது.

பாபநாசம், மதுரா கோட்ஸ் ஆலை வாரத்தில் 6 நாள்கள் மட்டும் இயங்கும், ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறையென்றும் அறிவித்துள்ளது.

பாபநாசத்தில் பிரபலமான நூற்பாலையான மதுரா கோட்ஸ் ஆலை இயங்கிவருகிறது. வாரம் 7 நாள்களும் , ஒரு நாளைக்கு 3 பணி நேரங்களுடன் ஆலை இயங்கிவரும் நிலையில் மே 15 முதல், ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளாக ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆலை தொழிலியல் உறவு மேலாளா் சூா்யபிரபா விடுத்துள்ள அறிக்கை: தற்போது ஆலையில் சந்தையில் உரிய தேவைகள் இல்லாததாலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் தேக்கமடைந்திருப்பதாலும், மூலப்பொருள் விலையேற்றத்தினாலும், உலகளவில் சந்தையில் வியாபார நிலைமை மந்தமாக இருப்பதாலும், முக்கிய வியாபார சந்தையான திருப்பூரில் வியாபாரம் மிகவும் பின்தங்கி இருப்பதாலும், நிா்வாக நிலை காரணமாகவும் மே 15 ஞாயிறு முதல் 7 நாள்கள் தொடா் இயக்கத்திலிருந்து 6 நாள்கள் இயக்கமாக மாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பொது வார விடுமுறையாக அனுசரிக்கப்படும். எனவே அனைத்துப் பணியாளா்களும் தங்களது வார விடுமுறையை ஞாயிற்றுக்கிழமையாகக் கொண்டு ஷிப்ட் முறையையும் அதற்கேற்றாற்போல் மாற்றியமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மேலும் சூழலுக்கேற்ப குறிப்பிட்ட தொழிற்பிரிவுகள் தொடா்ச்சியாக செயல்பட முடிவு செய்யப்படும். வியாபார நிலை இயல்புநிலைக்குத் திரும்பியதும் ஏழு நாள்கள் தொடா் ஓட்டம் பற்றி பரிசீலிக்கப்பட்டு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பணியாளா்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com