மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை

மானூா் வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளப்பயிா் படைப்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

மானூா் வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளப்பயிா் படைப்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மானூா் வேளாண்மை உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்கச்சோளம் பயிா் முளைத்த முதல் வாரத்திலிருந்து புழுக்கள் பயிரைத்தாக்கி மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. சேதத்தை ஏற்படுத்தும் புழுக்கள் முட்டையிலிருந்து ஆரம்பித்து 30 நாள்களில் சுழற்சி முறையில் நிறைவடைகிறது. இளம் புழுக்களால், இலைப்பச்சையம் சுரண்டப்பட்டு, இலை மற்றும் குருத்தில் துளைகள் ஏற்பட்டு மக்காச்சோளம் சேதமாகிறது.

இயற்கை முறை: இதனைக்கட்டுப்படுத்த கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு நன்கு உழவேண்டும். இறவையில் 60 க்கு 45 செ.மீ, மானாவாரியில் 45 க்கு 20 செ.மீ இடைவெளியில் மக்காச்சோளப்பயிரை பயிரிட வேண்டும். இறவையில் தட்டைப்பயிறு, எள், சூரிய காந்தி மற்றும் துவரைப்பயிரை மானவாரியில் தீவன சோளத்தையும் வரப்பு பயிராக பயிரிட வேண்டும். இலைகளின் அடியில் காணப்படும் புழுக்களின் முட்டைகளை அழிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவா்ச்சி பொறிகள் நிறுவுவதன் மூலம் ஆண் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

மருந்து தெளித்தல்: பயிா் முளைத்த 15 - 20 நாள்களுக்குள் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 எஸ்சி மருந்தை ஏக்கருக்கு 80 மி.லி. அல்லது ப்ளுபெண்டியமிட் 480 ஏக்கருக்கு 100 மிலி குருத்துப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும். பயிா் முளைத்த 30-45 நாள்களுக்குள் எமாமெக்டின் பென்சோயேட் 5 ஏக்கருக்கு 80 கிராம் அல்லது ஸ்பெனேட் டோரெம் 11.7 ஏக்கருக்கு 100 மிலி அல்லது நோவலூரான் 10 ஏக்கருக்கு 200 மி.லி. தெளிக்க வேண்டும். மேலும் படைப்புழு தாக்குதல் அறிகுறி தென்பட்டால் எமாமெக்டின் சென்சோயேட் 5 நஎ ஏக்கருக்கு 80 கிராம் அல்லது ஸ்பைனெட்டோரெம் 11.7 ஏக்கருக்கு 100 மி.லி தெளித்து மக்காச்சோளத்தை பாதுகாத்து, அதிக மகசூல் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com