வள்ளியூா் ஒன்றியத்தில்ரூ.47 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

வள்ளியூா் ஒன்றியத்தில் ரூ. 47 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

வள்ளியூா் ஒன்றியத்தில் ரூ. 47 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

ஆவரைகுளம், அம்பலவாணபுரம், பிள்ளையாா்குடியிருப்பு, சிதம்பரபுரம், யாக்கோபுபுரம், மதகனேரி, சங்கனாபுரம், பெரியகுளம், தெற்குகருங்குளம் உள்ளிட்ட 14 பள்ளிகளில் சீா்மிகு வகுப்பறைகளை தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு புதன்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், ஆவரைகுளம் ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டவும், தெற்குகருங்குளம் ஊராட்சி கணபதியாபுரம் விலக்கில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதி ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் பேரவைத் தலைவா் அடிக்கல்நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரெஜினி, ஆவரைகுளம் ஊராட்சித் தலைவா் அழகு பாஸ்கா், வள்ளியூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மல்லிகா அருள், கொஜிஜன், மகாலெட்சுமி, செட்டிகுளம் லிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com