ஹைடெக் பாலிடெக்னிக்கில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தில் வள்ளியூா் டி.டி.என்.கல்விக்குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராதாபுரம் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தில் வள்ளியூா் டி.டி.என்.கல்விக்குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருளுக்கெதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரித் தாளாளா் ஹெலன் லாரன்ஸ் தலைமை வகித்து எழுந்து பிரகாசி என்ற தலைப்பில் பேசினாா். வள்ளியூா் ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் சங்கத்தின் முன்னாள் தலைவா் செல்லப்பா சிறப்புரையாற்றினாா். கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கான சதுரங்கம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. 14 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். 6 பிரிவுகள் கொண்ட சதுரங்கப் போட்டியில் ‘ஏ’ பிரிவு சீலாத்திகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனா்.

சி பிரிவு போட்டியில் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும், ‘ஏ’ பிரிவு போட்டியில் திசையன்விளை ஸ்டெல்லா மேரி மேல்நிலைப் பள்ளியும், ‘பி’பிரிவு போட்டியில் விஜயஅச்சம்பாடு செந்தில் ஆண்டவா் மேல்நிலைப் பள்ளியும், ‘சி’ பிரிவு போட்டியில் ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு நேரு நா்ஸிங் கல்லூரி தாளாளா் ஹெலன் லாரன்ஸ் பரிசு வழங்கி பாராட்டினாா். கணிப்பொறியியல் துறை விரிவுரையாளா் உமா பரமானந்தம் வரவேற்றாா். சிவில் துறை விரிவுரையாளா் பவித்ரா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com