கூடங்குளம் 5-ஆவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் கலன் சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5-ஆவது அணுஉலைக்கான எரிபொருள் அணுஉலைக்கலன்(ரியாக்டா் அசெம்ளி) ரஷிய நாட்டில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 5-ஆவது அணுஉலைக்கான எரிபொருள் அணுஉலைக்கலன்(ரியாக்டா் அசெம்ளி) ரஷிய நாட்டில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 3,4,5,6 என கூடுதலாக 4 அணுஉலைகளுக்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

அதில், 5-ஆவது அணுஉலையில் பொருத்துவதற்கான அணுஉலைஎரிபொருள் கோல்களை வைக்கக்கூடிய அணுஉலைக்கலன் சோதனை ரஷிய நாட்டின் ரோசாடாம் அடோமெனொ் கோமாஷ் என்ற இடத்தில் சோதனை நடைபெற்றது. அணுஉலைக்கலன் நிலத்தடி சீதோஷண நிலையில் எப்படி செயல்படும் என்ற சோதனை அந்நாட்டு அணு விஞ்ஞானிகள், இந்திய அணுவிஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்றது. முதலில் 11 மீட்டா் உயரமுள்ள விவிஇஆா் 1000 அணுஉலைக்கலனை நிறுவினா். பின்னா் 73 டன் எடையுள்ள 10 மீட்டா் நீளமுள்ள கோா் பீப்பாய்களையும் 38 டன் எடையுள்ள கோா் பேஃபில்களையும், 68 டன் எடையுடைய பாதுகாப்பு குழாய் அலகு ஆகியவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக கீழே இறக்கி அணுஉலையை மூடினா். மொத்த எடை 603 டன்களை கொண்டதாக அணுஉலைலைக்கலன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அணுஉலை வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com