ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த கோரி ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி சமூக ஆா்வலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பகுதி சமூக ஆா்வலா்கள் ஒன்றிணைந்து, இம்மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருக்க போலீஸாரிடம் அனுமதி கோரினா். அனுமதி மறுக்கப்பட்டதால் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் சுமாா் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தகவல் அறிந்து வந்த தென்காசி சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரேமலதா, வட்டாட்சியா் ரவீந்திரன், காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அரசு இம்மருத்துவமனையே மேம்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் 10 மருத்துவா்கள், 10 செவிலியா்கள் 60 படுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com