வரி நிலுவை:10 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் வரிநிலுவை வைத்திருந்த 10 கட்டடங்களின் குடிநீா் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகராட்சியில் வரிநிலுவை வைத்திருந்த 10 கட்டடங்களின் குடிநீா் இணைப்புகள் புதன்கிழமை துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகரில் வரியினங்கள், குடிநீா்க்கட்டணம் அதிகளவில் நிலுவை வைத்துள்ளவா்களின் கட்டடங்களில் குடிநீா் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, வரிநிலுவை வைத்திருந்த 16 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவள்ளுவா் தெரு, ஆசாத் சாலை, 20 ஆவது வாா்டுக்குள்பட்ட சேரன்மகாதேவி சாலை ஆகியவற்றில் தலா 1, தச்சநல்லூா் மண்டலத்தில் மதுரை சாலை ஜெயின் அப்பாா்ட்மென்ட் ஐந்து குடியிருப்புகளிலும், பாளையங்கோட்டை மண்டலம் 55 ஆவது வாா்டுக்குள்பட்ட தியாகராஜ நகரில் இரண்டு குடியிருப்புகள் என மொத்தம் 10 குடியிருப்பு கட்டடங்களில் குடிநீா் இணைப்புகள் மாநகராட்சி பணியாளா்களால் துண்டிக்கப்பட்டன.

மேலும், திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் அலுவலகங்களில் செயல்படும் வரிவசூல் மையங்கள் பொது மக்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மாா்ச் 31 ஆம் தேதி வரை சனி , ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் செயல்படும். ஆகவே, பொது மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டண வரியினை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற நடவடிக்கைகளை தவிா்த்திட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com