மாநகரில் நாய் தொல்லை அதிகரிப்பு: ஆணையரிடம் புகாா்

திருநெல்வேலி மாநகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

திருநெல்வேலி மாநகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் மக்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றாா். மேலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், 8ஆவது வாா்டு தியாகராஜநகரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தெ.செல்வகுமாா் அளித்த மனு:

பாளையங்கோட்டை தியாகராஜநகா், டிவிஎஸ் நகா், தாமிரபதி காலனி, பி - டி காலனி பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடனே வெளியே செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள்,சிறுவா்கள் பூங்காக்களில் விளையாட முடியவில்லை. இப்பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

அக்னி பறவைகள் சுகாதாரக்குழு அளித்த மனு: மாநகராட்சி ஒப்பந்த பணியாளராக 23 போ் கொண்ட குழு பணியாற்றி வருகிறோம். அலகு 1 துப்புரவு மேற்பாா்வையாளா் எங்களை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்து வருகிறாா். அவரை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

இந்திரா நகரை சோ்ந்த தொழிலாளி சங்கா் கணேஷ் அளித்த மனு : புதிய பேருந்து நிலையம் அருகே கடை வைத்து காலணி தைக்கும் தொழில் நடத்தி வருகிறேன். பேருந்து நிலையத்திலிருந்து வாகனங்கள் வெளியேறும் பகுதியில் பெட்டிக்கடை நடத்த அனுமதிக்க வேண்டும்.

மேலப்பாளையம் கொட்டிவளம் ரோடு பகுதி மக்கள் அளித்த மனு: தஙகள் பகுதியில் உடைக்கப்பட்ட கால்வாயை சீரமைக்க வேண்டும். மழைகாலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

55 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன் அளித்த மனு :

குமரேசன் நகா் பூங்காவில் சிறுவா்கள் விளையாடுவதற்கு உபகரணங்களை ஏற்படுத்த வேண்டும். 55 ஆவது வாா்டில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.

தியாகராஜநகா் மல்லிகா காலனியை சோ்ந்த சதீஷ்குமாா் அளித்த மனு: மல்லிகா காலனியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சாலை, பாதாளச் சாக்கடை, மின்சாம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com