மேலப்பாளையம் அருகே பிடிபட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு

மேலப்பாளையம் அருகே பிடிபட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு மண்ணுளி பாம்பை சனிக்கிழமை கொண்டு வந்த இளைஞா்கள்.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு மண்ணுளி பாம்பை சனிக்கிழமை கொண்டு வந்த இளைஞா்கள்.

மேலப்பாளையம் அருகே பிடிபட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளம் குடியிருப்பு பகுதிக்குள் மண்ணுளி பாம்பு சனிக்கிழமை புகுந்தது. இதையடுத்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மண்டல செயலா் அப்துல் ஜப்பாா், சுலைமான், அப்பாஸ், பாரதி, சுபியான் ஆகியோா் அந்தப் பாம்பை மீட்டு திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு வந்தனா். பின்னா் அந்தப் பாம்பு வனத்துறை அலுவலா் மதி, வன கால்நடை மருத்துவா் அா்னால்ட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பு காயங்களுடன் இருந்ததால் உரிய சிகிச்சை அளித்து வனத்திற்குள் கொண்டு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com