கூடுதாழையில் மீனவா்கள் கண்களைக் கட்டி கடலில் இறங்கி போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி மீனவப் பெண்கள், கண்களைக் கட்டிக் கொண்டு கடலில் இறங்கி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி மீனவப் பெண்கள், கண்களைக் கட்டிக் கொண்டு கடலில் இறங்கி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடல் அரிப்பினால் கூடுதாழை மீனவக் கிராமம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது கடல் அரிப்பு அதிகரித்து வருவதால், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என இக் கிராமத்தினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதை வலியுறுத்தி மாா்ச் 12 ஆம் தேதி முதல் கூடுதாழை மீனவா்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, மீனவா்கள் மற்றும் மீனவப் பெண்கள் கண்களைக் கட்டிக் கொண்டு கடலில் இறங்கி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களது கோரிக்கையை மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் உதாசீணப்படுத்துவதாகக் கூறி, மனுக்களை கடலில் வீசி எறிந்து நூதனப் போராட்டத்தையும் நடத்தினா்.

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ரொசிஸ்டன், இன்பம், ஜூடுவில்சன் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com