மாற்றுத்திறன் குழந்தைகள் மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் புதன்கிழமை தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் புதன்கிழமை தொடங்குகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் புதன்கிழமை (ஜன.25) முதல் மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது.

முதல் மருத்துவ முகாம் ரெட்டியாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெறுகிறது. ஜன.27இல் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 30இல் பழைய பேட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், 31இல் நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பிப். 2இல் முக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், பிப். 3இல் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பிப்.6இல் சேரன்மகாதேவி பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பிப். 8இல் ராதாபுரம் நித்தியக் கல்யாணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பிப்.10இல் மானூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பிப். 13இல் அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆா்.எம்.வி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், பிப். 15இல் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெறும்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், நடைப்பயிற்சி உபகரணம், காலிபா் கருவி, மாதாந்திர உதவித்தொகை, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், பேருந்து, ரயில் பயணச் சலுகை பெறுவதற்கான சான்று பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com