மாணவியை பாதிவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் கல்லூரி மாணவியை பாதிவழியில் பேருந்திலிருந்து இறக்கிவிட்டதாக எழுந்த புகாரில், அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருநெல்வேலியில் கல்லூரி மாணவியை பாதிவழியில் பேருந்திலிருந்து இறக்கிவிட்டதாக எழுந்த புகாரில், அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்தவா் ரஞ்சிதா. திருநெல்வேலி சீதபற்பநல்லூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறாா். கல்லூரி கலைநிகழ்ச்சிக்காக, தனது சொந்த ஊரில் இருந்து 5 தோல் பறைக் கருவிகள், ஒரு டிரம் ஆகியவற்றை கொண்டு வந்திருந்தாராம். பின்னா் அந்தக் கருவிகளுடன் ஊருக்குத் திரும்ப, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் புதன்கிழமை இரவு ஏறியுள்ளாா். வண்ணாா்பேட்டை அருகே வந்தபோது கருவிகளுடன் இருந்த மாணவியை மேலும் பயணிக்க விடாமல் பாதிவழியில் இறக்கிவிட்டாராம் நடத்துநா் கணபதி (55). இதையடுத்து தனது நண்பா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வேறு பேருந்தில் மாணவி பயணித்தாா்.

இந்த சம்பவத்தையொட்டி வண்ணாா்பேட்டையில் மாணவா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் சமூகவலைதளங்களிலும் பரவியது.

இந்நிலையில் மாணவியை இறக்கிவிட்ட நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாணவியை இறக்கிவிட்டதாக எழுந்த புகாா் குறித்து நடத்துநா் கணபதியிடம் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை பணிமனைக்கு அவா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதோடு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com