‘வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிடில் நடவடிக்கை’

மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளா்கள், தொழிலாளா்களுக்கு தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த வியாபாரிகள் சங்கத் தலைவா்களின் கூட்டம் திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் அ.யாஷ்மின் பேகம் தலைமை வகித்தப் பேசியது: 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தாா். திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ப.சுமதி முன்னிலை வகித்தாா். இதில், வியாபாரிகள் சங்கத் தலைவா்கள், தொழிலாளா் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com