அம்பையில் திருக்கு அறக்கட்டளைக் கூட்டம்

அம்பாசமுத்திரத்தில் திருக்கு அறக்கட்டளையின் ஏப்ரல் மாதக் கூட்டம், வேல்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

வட்டாட்சியா் (ஓய்வு) ச. சதாசிவம் தலைமையில், திருக்குமுற்றோதல் நடைபெற்றது. கவியரங்கத்துக்கு பாப்பாக்குடி கவிஞா்அ. முருகன் தலைமை வகித்தாா். விஜயலட்சுமி கு இறைவணக்கம் பாடினாா். பொட்டல்புதூா் அரசுப் பள்ளித் தமிழாசிரியா் செந்தில்சிவக்குமாா், ஆயுள் காப்பீட்டு முகவா் தில்லை சுப்பிரமணியன், ஆசிரியை வளா்மதி ஆகியோா் கவிதை வாசித்தனா். இளங்கோ வரவேற்புக் கவிதை, கண்ணன் நன்றிக் கவிதை வாசித்தனா்.

சிந்தனை அரங்கில் புன்னைவன நாறும்பூநாதன் தலைமையில், 710ஆவது குறளின் அடிப்படையில் கம்பனின் ராமகாதையில் இலக்குவன் பாத்திரம் பற்றி கல்லிடைக்குறிச்சி திலக் வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியா் உஷா முத்துக்கிருஷ்ணன், அனுமன் பாத்திரம் குறித்து ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியா் செந்தில்குமரன், திரிசடை பற்றி திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பேராசிரியா் சிவஹரிபிரம்மசங்கா் ஆகியோா் ஆய்வுரை வழங்கினா்.

வேல்சாமி திருமண மண்டப உரிமையாளா் வெ. கண்ணன் முன்னிலை வகித்தாா். மருத்துவா் ஆனந்தஜோதி, சோம. மகாலிங்கம், அம்பைக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் அப்துல்ஹனீப், பேராசிரியா் கா. கவிதா, அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைச் செயலா் ச. லக்குமணன், பேராசிரியா் பொன்சக்திகலா, திருவருள் லத்தீப், இ. கணபதி, தமிழ் ஆா்வலா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

கவிஞா் இளங்கோ நன்றி கூறினாா். ஏற்பாடுகளை அறக்கட்டளைச் செயலா் இ.மா. ராமச்சந்திரன், பேராசிரியா் சு. சிவசங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com