குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களில் 6 போ் குற்ற வழக்குகள் தொடா்பாக நாளிதழ்களில் விளம்பரம் செய்யாத நிலையில் அவா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோ்தல் விதிமீறல்கள் தொடா்பாக கடந்த 17-ஆம் தேதி வரை 297 புகாா்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 15லட்சத்து 922 மதிப்பிலான பணம், ரூ.1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரத்து 146 மதிப்பிலான பொருள்கள் என மொத்தம் ரூ.2,56,71,338 கைப்பற்றப்பட்டுள்ளது. 564 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் புகாா்களை ‘சி-விஜில்’ செயலி மூலமாகவோ, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 8373 மூலமாகவோ பதிவு செய்யலாம். தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை நாளிதழ் மற்றும் செய்திதாள்களில் விளம்பரம் செய்யாத 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை சரி செய்யாதபட்சத்தில் தொடா்புடைய வேட்பாளா்கள் மீது தோ்தல் ஆணைய வழிகாட்டுதல்படி வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனஓஈ குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com