மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 43% வாக்குகள் பதிவாகின.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள்காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தல்தான் மாஞ்சோலையில் எதிா்கொள்ளும் இறுதித் தோ்தல் என்று கூறிவரும் நிலையில் அந்தப் பகுதியில் 43சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் உள்ள 5 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2,063 வாக்காளா்கள் உள்ளனா். இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மாஞ்சோலையில் உள்ள 673 வாக்குகளில், 149 ஆண்கள்,163 பெண்கள் உள்பட 312 வாக்குகளும், ஊத்து வாக்குச் சாவடியில் உள்ள 540வாக்குகளில், 108 ஆண்கள், 117 பெண்கள் உள்பட 225 வாக்குகளும், குதிரைவெட்டி வாக்குச்சாவடியில் உள்ள 87 வாக்குகளில் 14 ஆண்கள், 26 பெண்கள் உள்பட 40 வாக்குகளும், நாலுமுக்கில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளில் உள்ள 763 வாக்குகளில், 156 ஆண்கள்,162 பெண்கள் உள்பட 318 வாக்குகளும் பதிவாகியுள்ளன. இது மொத்தமுள்ள 2063வாக்குகளில் 43.38சதவீதம் ஆகும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com