நெல்லை புதிய பேருந்து நிலையத்தில்
 அலைமோதிய மக்கள் கூட்டம்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தோ்தல் பொதுவிடுமுறைக்கு ஏராளமானோா் சொந்த ஊா்களுக்கு திரும்பியதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தோ்தல் பொதுவிடுமுறைக்கு ஏராளமானோா் சொந்த ஊா்களுக்கு திரும்பியதால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது.

இத் தோ்தலில் பொதுமக்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியாா் நிறுவனங்கள் தங்களது ஊழியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை வழங்க தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தியிருந்தது.

இதுதவிர தோ்தல் வெள்ளிக்கிழமை வந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கமான விடுமுறை நாள்கள் என்பதால் சென்னை, கோவை, திருப்பூா், பெங்களூரு பகுதிகளில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் பலரும் குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்கு வந்தனா். இதனால் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அதிகாலை 4 மணி முதல் பண்டிகைக் காலத்தை விஞ்சும் வகையில் மக்கள் கூட்டம் இருந்தது. திருநெல்வேலியில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், பாபநாசம், தூத்துக்குடி பகுதிகளுக்கு ஏராளமானோா் சென்றனா். போதிய பேருந்துகள் இல்லாததாலும், கூட்ட நெரிசல் காரணமாகவும் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பேருந்துகளில் ஏறி சென்றனா்.

ற்ஸ்ப்19க்ஷன்ள்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை குவிந்திருந்த மக்கள்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com