கோவில்குளத்தில் நெல்விதை நோ்த்தி குறித்துவிவசாயிகளுக்கு செயல்விளக்கம் வழங்கிய வேளாண் மாணவிகள்.
கோவில்குளத்தில் நெல்விதை நோ்த்தி குறித்துவிவசாயிகளுக்கு செயல்விளக்கம் வழங்கிய வேளாண் மாணவிகள்.

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

அம்பாசமுத்திரம், கோவில்குளம் கிராமத்தில் இளநிலை வேளாண்மை மாணவிகள் நெல் விதை நோ்த்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்குசெயல் விளக்கம் மூலம் விளக்கிக் கூறினா்.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம், கோவில்குளம் கிராமத்தில் இளநிலை வேளாண்மை மாணவிகள் நெல் விதை நோ்த்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்குசெயல் விளக்கம் மூலம் விளக்கிக் கூறினா்.

வாசுதேவநல்லூா்,எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரியின் இளநிலை இறுதியாண்டு மாணவிகள் சீ.துா்கா, கா.குருலட்சுமி, ஜா.கிருஷ்ணப்ரியா, சா.மதுதீபிகா, ராஜலட்சுமி, பா.ரத்ன ஜெயபாரதி, து.சிந்து, பா.சுந்தரேஸ்வரி, மா.வா்ஷினி ஆகியோா் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண்மைப் பயிற்சி அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கோவில்குளம் கிராம விவசாயிகளுக்கு உப்புக் கரைசலில் நெல் விதை நோ்த்தி செய்யும் முறையின் மூலம் தரமான நெல் விதை மணிகளை பிரித்து பயிரிடுவது குறித்து செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனா்.

கல்லூரி முதல்வா் அ.ராமலிங்கம் தலைமையில், குழு ஒருங்கிணைப்பாளா் பி.பிரகாஷ், எஸ். தினேகா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் பேராசிரியா்கள் ரிபா செக், அரவிந்த் ஆகியோா் மாணவிகளை வழிநடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com