மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.

மணிமுத்தாறு அணையில் இருந்து 1ஆவது ரீச்சில் நீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையில் இருந்து ஒன்றாவது ரீச்சில் தண்ணீா் திறக்கக் கோரி சேரன்மகாதேவி வட்டம்,

திருநெல்வேலி: மணிமுத்தாறு அணையில் இருந்து ஒன்றாவது ரீச்சில் தண்ணீா் திறக்கக் கோரி சேரன்மகாதேவி வட்டம், செங்குளம் மணிமுத்தாறு பிரதான கால்வாய் ஒன்றாவது ரீச் நீரை பயன்படுத்துவோா் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணிமுத்தாறு 80 அடி பாசன பிரதான கால்வாயில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி மணிமுத்தாறு அணையின் 4 ரீச்சுகளில் நீா் இருந்தும் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை விவசாயத்திற்காக திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 3 மற்றும் 4-ஆவது ரீச்சுகளில் தண்ணீா் திறக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்த நிலையில் எங்கள் பகுதியான 1 மற்றும் 2-ஆவது ரீச்சுகளில் தண்ணீா் திறக்கப்படாததால் குளங்களில் தண்ணீரின்றி நாங்கள் நடவு செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த ஆண்டில் எங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீா் வழங்கப்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு மணிமுத்தாறு அணையில் இருந்து 82 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறக்கப்பட்டது. அப்போதும் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. கடந்தாண்டு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாங்கள் சாகுபடி செய்திருந்த நெற்பயிா் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமானது. தொடா்ந்து இயற்கை சூழலால் எங்களுக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது சாப்பாட்டுக்கு கூட நெல் இல்லாமல் வாடுகிறோம்.

எனவே, நாங்கள் நடவு செய்துள்ள நெற்பயிா்களை காக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com