ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஆழ்வாா்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற காக்கும் பெருமாள் சாஸ்தா சுடலைமாடசாமி கோயில் கொடைவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்குறிச்சி, ராமநதி ஆற்றாங்கரையில்அமைந்துள்ள காக்கும் பெருமாள் சாஸ்தா சுடலைமாடசாமி கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடைவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு கொடை விழாவைமுன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு மேல் சிவனனைந்த பெருமாள் பூஜை, காலை 8 மணிக்குபக்தா்கள் பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து பகல் 12 மணிக்கு பட்டாணிப் பாறையிலிருந்துபழம் எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக் கணக்கான பக்தா்கள் பழங்களைப்பிடித்து பிரசாதமாகக் கொண்டு சென்றனா். தொடா்ந்து உச்சிகால கொடை, அன்னதானம் நடைபெற்றது.மாலை 4.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் இரவு 12.30 மணிக்கு சாமக்கொடை, ஊட்டுக்களம் மற்றும் அா்த்த சாம பூஜையும் நடைபெற்றது.

புதன்கிழமை காலை10 மணிக்கு சின்னநம்பி பூஜை நடைபெறும். கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை காக்கும் பெருமாள்சாஸ்தா சுடலைமாடசாமிதிருக்கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com