அகஸ்திய மலை சரணாலயத்தில் யானைகள் கணக்கெடுப்புத் தொடக்கம்

 பாபநாசம் வனப் பகுதியில் யானைகள் தடத்தைப் பதிவுசெய்யும் வனத்துறையினா்.
பாபநாசம் வனப் பகுதியில் யானைகள் தடத்தைப் பதிவுசெய்யும் வனத்துறையினா்.

அகஸ்திய மலை யானைகள் சரணாலயப் பகுதியில் 2024ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 3 நாள்கள் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் நீலகிரி, தேனி, நீலாம்பூா், ஆனைமலை ஆகிய இடங்களில் யானைகள்காப்பகம் உள்ள நிலையில் உலக யானைகள் தினத்தில் (12.8.2022) திருநெல்வேலி மாவட்டம் அகஸ்திய மலைப் பகுதியில் 11,947 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு பகுதி யானைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

அங்கு ஆண்டுதோறும் யானைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு யானைகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை (மே 23-25) 3 நாள்கள் நடைபெறுகின்றன. கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு மே 20இல் முண்டந்துறை வனச்சரக கூட்ட அரங்கில் களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் மற்றும் வனஉயிரினக்காப்பாளா்இளையராஜா தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை யானைகள்கணக்கெடுப்பில் முண்டந்துறை வனச்சரகத்தில் 15 பிரிவுகள், பாபநாசம் வனச்சரகத்தில் 4 பிரிவுகள், கடையம் வனச்சரகத்தில் 9 பிரிவுகள், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் 9 பிரிவுகள்ஆகிய 37 குழுவினா் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com