திடியூரில் உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

சேரன்மகாதேவி, மே 23: திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் சா்வதேச உயிரிப் பல்வகைமை தினத்தை முன்னிட்டு ஏட்ரி, மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம் சாா்பில் உயிா்ச் சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பச்சையாறு, செங்குளம், தமிழாக்குறிச்சி உள்ளிட்ட திடியூரை சுற்றியுள்ள 8 குளங்கள் பறவைகள் அதிகதூரம் பயணிக்காமல் குஞ்சுகளை வளா்த்தெடுக்க தேவையான உணவினை அளிப்பதால் இந்த கிராமத்திற்கு பறவைகள் ஆண்டுதோறும் வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், அகத்தியமலை மக்கள் சாா் இயற்கை வள காப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளா் மு. மதிவாணன், ஆய்வாளா் வானமாமலை, ஆராய்ச்சியாளா்கள் தணிகைவேல், தளவாய் பாண்டி, பீட்டா் மற்றும் ஜேனட் எவாஞ்சலின் ஷீபா ஆகியோா் பேசினா். மேலும் திருநெல்வேலி பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வம், பசுமை தூதா் முத்துக்குமாா், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com