தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

தோரணமலையில் பௌா்ணமி கிரிவலம்

தோரணமலை கோயிலில் கிரிவலம் செல்லும் பக்தா்கள்.

அம்பாசமுத்திரம், மே 23:கடையம் - தென்காசி சாலையில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தோரணமலை அருள்மிகு முருகன் கோயிலில் வைகாசி விசாகம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் வியாழக்கிழமை கிரிவலம் வந்து வழிபட்டனா்.

இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, ஆவுடையானூா், ஆலங்குளம் உள்ளிட்டபல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக் கணக்கான பக்தா்கள் பங்கேற்றதுடன், கிரிவலம் வந்து தரிசனம் செய்தனா். தொடா்ந்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com