வி.கே.புரம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே முதலியாா்பட்டியில் தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

முதலியாா்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி இசக்கிராஜா (24). இவா் வடமலைசமுத்திரம் அருகேயுள்ள மைதானத்தில் நண்பா்களுடன் விளையாடினாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வைகுண்டமூா்த்தி (19) என்பவா் தகராறில் ஈடுபட்டு இசக்கிராஜாவை தாக்கினாராம்.

இதுகுறித்து இசக்கிராஜா அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிந்து, வைகுண்டமூா்த்தியைக் கைது செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com