புதிதாக தோற்றுவிக்கப்பட்ட வட்டங்களின் எல்லைகள்!

திருச்சி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மருங்காபுரி வட்ட (தாலுக்கா) அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் மருங்காபுரி வட்ட (தாலுக்கா) அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருச்சி வட்டத்தை இரண்டாகவும் (திருச்சி, திருச்சி கிழக்கு), மணப்பாறை வட்டத்தை இரண்டாகவும் (மணப்பாறை, மருங்காபுரி) பிரித்து, திருச்சி கிழக்கு மற்றும் மருங்காபுரி ஆகிய இரு வட்டங்கள் தோற்றுவிக்கப்படுவதாக அண்மையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதன்படி, திருச்சி கிழக்கு வட்டத்தில் உள்ளடங்கும் பகுதிகள்:

உக்கடை அரியமங்கலம், தேவதானம், சிந்தாமணி, திருச்சி டவுன் 1, 2, 3, 4, 5 பகுதிகள், நத்ஹர்வலி தர்கா, தாராநல்லூர் வடக்கு, தாராநல்லூர் தெற்கு,  காந்தி மார்க்கெட், சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம், அம்பிகாபுரம்.

வரகனேரி, எடத்தெரு, மல்லிகைபுரம், கீழப்புதூர், பாலக்கரை, முதலியார்சத்திரம், ஆலத்தூர், மேலக்கல்கண்டார்கோட்டை, கொட்டப்பட்டு, சுப்பிரமணியபுரம், விமான நிலையம், பொன்மலைப்பட்டி, செம்பட்டு, கே. சாத்தனூர் வடக்கு, தெற்கு, கல்லுக்குழி.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட கிழக்கு வட்டத்தின் மக்கள் தொகை- 3,29,701.

திருச்சி வட்டத்தில் அடங்கும் பகுதிகள்:

ஆழ்வார்தோப்பு, தென்னூர் 1, 2, புத்தூர் மேற்கு, கிழக்கு,  உய்யக்கொண்டான் திருமலை, ராமலிங்கநகர், பெரிய வடவூர், தாமலவாரூபயம், உறையூர், பாண்டமங்கலம், அரவானூர்.

பஞ்சப்பூர், பிராட்டியூர் கிழக்கு, மேற்கு, கோ-அபிஷேகபுரம், காஜாமலை, கன்டோன்மென்ட், கருமண்டபம், மிளகுப்பாறை, மார்சிங்பேட்டை, பீமநகர்.

தொடர் போராட்டம்:

வார்டு எண் 38, 39, 40, 53 ஆகிய நான்கு வார்டுகளும் ஸ்ரீரங்கம் வட்டத்திலிருந்து திருச்சி வட்டத்தில் இணைகின்றன (இந்தப் பகுதி மக்கள்தான் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).

இதுவரை சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் வட்ட அலுவலகத்துக்கு சென்று வந்த இவர்கள் தற்போது திருச்சி வட்டத்தில் இணைக்கப்பட்டதால் சராசரியாக 6 கிமீ தொலைவுக்குள் வட்ட அலுவலகத்துக்கு வந்து திரும்பும் வசதி பெற்றுள்ளனர்.

மருங்காபுரி:  மருங்காபுரி வட்டத்தில் அடங்கும் பகுதிகள்:

துவரங்குறிச்சி பகுதி: கண்ணூத்து, எண்டப்புளி, அம்மா சமுத்திரம், கருமலை, துவரங்குறிச்சி, காரைப்பட்டி, வேலக்குறிச்சி, கஞ்சநாயக்கன்பட்டி, இக்கரைகோசிகுறிச்சி, செவல்பட்டி, அக்கியம்பட்டி, அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர், செவந்தாம்பட்டி.

மருங்காபுரி பகுதி: ஆமணக்காம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, திருநெல்லிப்பட்டி, முத்தாழ்வார்பட்டி, பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, மேற்கு, அயன்பொருவாய், தென்முகம் இடையப்பட்டி, மருங்காபுரி, யாகபுரம், நல்லூர், வெங்கட்நாயக்கன்பட்டி.

வளநாடு பகுதி: தாதனூர், தொட்டியப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பழுவஞ்சி மேற்கு, கிழக்கு, பிராம்பட்டி வடக்கு, தெற்கு, தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, புத்தக்குடி, காப்பக்குடி. கவிநாரிப்பட்டி, கொடும்பப்பட்டி, வளநாடு.

புதிய மருங்காபுரி வட்டத்தின் மக்கள் தொகை- 1,41845, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சிப் பகுதிகள் அடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com