மாநில அளவிலான மேலாண்மைப் போட்டி

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில்,  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான  மாநில அளவிலான மேலாண்மைப் போட்டி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெர்றது. சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் சு. செந்தூர் செல்வன் தலைமை வகித்தார். ஜெ.ஜெ. கல்விக் குழுமத்தின் இணைச் செயலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
டால்மியா சிமென்ட்ஸ் தெற்கு மண்டல மேலாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ஜி. ஸ்ரீதர் விழாவில் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உரையாற்றினார்.
மேலாண்மை சார்ந்த நடத்தப்பட்ட பல்வேறுவிதமானபோட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி  மாணவ, மாணவிகள்   பங்கேற்றனர். இப்போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சத்தியமூர்த்தி, மேலாண்மைத் துறை இயக்குநர் எஸ். டபிள்யூ. ராஜமனோகரன் வாழ்த்திப் பேசினர்.  முன்னதாக மாணவி எஸ். நர்மதா வரவேற்றார்.  மாணவர் ஏ.ரிச்சர்ட் பிரவீன் ராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com