பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்

குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை

குறைந்த பட்ச ஊதியத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி பொன்மலை பணிமனை அருகே எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க திருச்சி கோட்ட செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமை வகித்தார்.  ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி அமைக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதிய விகிதத்தையும்  தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ரத்து செய்யப்பட்ட 52 வகையான பணப் பயன்களை மீண்டும் வழங்க வேண்டும். 20 ஆண்டு சேவைக்குப் பின்னரும் ஊதிய உயர்வு வழங்க நிபந்தனை விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
உணவு இடைவேளையின் போது ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பின்னர் பணிக்குத் திரும்பினர். 
 நாடு தழுவிய வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com