ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு பிரம்மாண்ட மாலை

ஸ்ரீரங்கம்  கோயில் ராஜகோபுரத்துக்கு 235 அடி நீளமுள்ள பூ மாலை திங்கள்கிழமை அணிவிக்கபட்டது.

ஸ்ரீரங்கம்  கோயில் ராஜகோபுரத்துக்கு 235 அடி நீளமுள்ள பூ மாலை திங்கள்கிழமை அணிவிக்கபட்டது.
ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நிகழாண்டு வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு  உபயதாரர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் சாத்தாரவீதி பூ வியாபாரிகள் சார்பில் 250 அடி நீளத்தில் இரண்டு அடுக்காக பூ மாலை தயாரிக்கப்பட்டது. 
இந்த மாலை, பெருமாளுக்கு உகுந்த மலர்களான விருட்சி பூ, சம்மங்கி, செவந்தி, துளசி ஆகியவற்றை கொண்டு 600 கிலோ எடை அளிவில் தயாரிக்கப்பட்டது.  30 தொழிலாளர்கள் சேர்ந்து தயாரித்த இந்த மாலை திங்கள்கிழமை ராஜகோபுரத்துக்கு அணிவிக்கப்பட்டது. இதேபோல், தாயார் சன்னதி கோபுரத்துக்கும் இரண்டு அடுக்காக 170 அடி நீள மாலை அணிவிக்கப்பட்டது. சுமார் ரூ.1 லட்சம் மதிப்பில் இந்த மாலைகள் தயாரிக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com