ஈ.வெ.ரா. கல்லூரியில் மே 6 முதல் கலந்தாய்வு

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு  மே 6 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு  மே 6 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 
திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மே 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6 ஆம் தேதி  பி.காம் பட்டப்படிப்பிற்கும், மே 7 ஆம் தேதி பி.எஸ்சி அறிவியல் துறை சார்ந்த பட்டப் படிப்புகளுக்கும், மே 9 ஆம் தேதி பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் மற்றும் பி.எஸ்சி காட்சித் தொடர்பியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகள் அனைத்து உண்மை சான்றிதழ்கள் மற்றும் பெற்றோருடன் வருமாறு கல்லூரி முதல்வர் ஜூலி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com