திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைக்கல்வி உள்ளிட்ட அனைத்து முதுநிலை வணிகவியல் பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
பல்கலைக்கழகம் சார்பில் 2018, நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட தொலைக்கல்வி உள்ளிட்ட அனைத்து முதுநிலை வணிகவியல் (எம்.காம்.) பாடங்களின் தேர்வு முடிவுகள் , பல்கலைக்கழக இணைய தளமான www.bdu.ac.in-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அதில் பதிவிறக்கம் செய்து அறியலாம். இத்தேர்வு முடிவில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புவோர், ஒளிநகல் தேவைப்படுமெனில் உரிய கட்டணத்தை பிப். 27-க்குள் கல்லூரி மூலமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.