பொன்மலை பணிமனையை பார்வையிட குவிந்த மக்கள்!

பொன்மலை பணிமனையைப் பார்வையிட மாணவ-மாணவிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை குவிந்தனர். 
பொன்மலை பணிமனையை பார்வையிட குவிந்த மக்கள்!

பொன்மலை பணிமனையைப் பார்வையிட மாணவ-மாணவிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை குவிந்தனர். 
நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ரயில்வே பணிமனையாக திருச்சி பொன்மலை விளங்கி வருகிறது. கடந்த 1928 ஆம் ஆண்டில் நீராவி என்ஜின் தயாரிப்புக்கு பிறகு, டீசல் என்ஜின், பயணி, சரக்கு, குளிர்மை ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் பழுது நீக்குவதற்கென பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் இப்பணிமனையில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் ஏதேனும் ஒருநாள் பொன்மலை பணிமனையைக் காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வகையில், சனிக்கிழமை பொன்மலை பணிமனையை காண அனுமதிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து திருச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், அமைப்பினர், வட மாநிலத்தவர்கள் என திரளானோர் பொன்மலை பணிமனைக்கு வந்தனர். தொடர்ந்து, அவர்களை வழிநடத்திய ஊழியர்கள் பொன்மலை பணிமனையில் நடைபெற்று வரும் பல்வேறு ரயில்வே பராமரிப்பு, தயாரிப்பு பணிகள் குறித்து விளக்கினர். இதை ஆர்வத்துடன் மாணவர்கள்,பொதுமக்கள் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர். சனிக்கிழமை ஆயுதபூஜையொட்டி பணிகள் நடைபெறவில்லை. அதோடு, பார்வை நேரமும் காலை 9 மணி முதல் 12 வரை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டது.  எனவே, பணிமனையை காணமுடியாமல் திரும்பிய சிலர் வேறு ஏதேனும் ஒரு நாளில் முழுநேரமும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொன்மலை பணிமனையை பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com