வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
By DIN | Published On : 14th April 2019 03:25 AM | Last Updated : 14th April 2019 03:25 AM | அ+அ அ- |

திருச்சியில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் அறிமுகம் மற்றும் விநியோகிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி புத்தூர் அக்ரஹாரத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் சுசீலா, மாவட்ட அமைப்பாளர் தனசேகர், அமைப்பின் பொறுப்பாளர் சதீஷ் ஆகியோர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை அறிமுகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.