ஸ்ரீ விக்னேஷ் ரெங்கா மெட்ரிக். பள்ளி 100 சதவிகித தேர்ச்சி

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் ரெங்கா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 


ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் ரெங்கா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 
ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் ரெங்கா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நடப்பாண்டில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 108 பேர் எழுதியிருந்தனர். 
இந்நிலையில், தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக இப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், வி.கி. விஷ்ணுவர்தன், செ. சங்கர், சி. விக்னேஷ்வரன், யோகேஷ் குமார் ஆகிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 
இதேபோல், கணிதம், அறிவியல் ஆகிய பாடப் பிரிவில் 2 மாணவர்கள், கணக்குப் பதிவியலில் ஒரு மாணவரும் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கும் மேல் 19 மாணவர்கள் பெற்றுள்ளனர். 
மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் வி.கோபிநாதன், முதல்வர் விஜயலட்சுமி, இயக்குநர் வரதராஜன், கல்வி ஆலோசகர் மலர்விழி, அறங்காவலர் லட்சுமி பிரபா ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com