ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.47.70 லட்சம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், ரூ.47.70 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், ரூ.47.70 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலின் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், ஏப். மாதத்துக்கான உண்டியல் 
காணிக்கை எண்ணும் பணி கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதியில் நடைபெற்றது. 
இதில், ரூ.47 லட்சத்து 70 ஆயிரத்து 353 ரொக்கம், 98 கிராம் தங்கம், 578 கிராம் வெள்ளி, வெளிநாட்டு ரூயாய் நோட்டுகள் 267 இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி, ஐயப்பா சேவா சங்கம் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com