ஏப். 29ஆம் தேதி முதல் மே 4 வரைநடமாடும் வாகன காசநோய் பரிசோதனை முகாம்

திருச்சி மாவட்டத்தில் ஏப்.29ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் ஏப்.29ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு வெளியிட்ட செய்திகுறிப்பு: திருச்சி மாவட்டத்தில் காசநோய் தொடர்பாக நடமாடும் வாகன பரிசோதனை முகாம் ஏப்.29ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை ஒன்றியம் வாரியாக நடைபெறவுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட எம்ஜிஆர் நகர், வண்ணாரப்பேட்டை, தாரநல்லூர், இ.பி. சாலை, ஜெயில்பேட்டை, கூவிபஜார், பொன்மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏப். 29ம் தேதி முகாம் நடைபெறுகிறது. மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பண்ணாங்கொம்பு, பொய்கைப்பட்டி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம், வைரம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பழையபாளையம், சேவல்பட்டி ஆகிய பகுதிகளில் ஏப்.30ஆம் தேதி முகாம் நடைபெறும்.
திருவெறுமபூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேங்கூர் கூத்தைப்பார், அல்அமீன் நகர், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கள்ளுக்குடி, இனாம்புலியூர், அந்தநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட எட்டரை ஆகிய பகுதிகளில் மே 1ஆம் தேதி முகாம் நடைபெறும்.
மண்ணச்சநல்லூர் ஒன்றியத்துக்குள்பட்ட சேலைமுல்லைநகர், காந்திநகர், துறையூர் ஒன்றியத்துக்குள்பட்ட மருவத்தூர், சேவைக்காரன்பட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பச்சைமலை, சோபனபுரம் ஆகிய பகுதிகளில் மே 2ஆம் தேதி முகாம் நடைபெறும். முசிறி ஒன்றியத்துக்குள்பட்ட ஆணைப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டியம் ஒன்றியத்துக்குள்பட்ட கொளக்குடி, மணமேடு ஆகிய பகுதிகளில் மே 3 ஆம் தேதி முகாம் நடைபெறும். லால்குடி, புள்ளாம்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட மாந்துரை, சிறுகையூர், கோவண்டக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மே 4ஆம் தேதி முகாம் நடைபெறும்.
இந்த நடமாடும் வாகனத்தில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், முதல்நிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் உடனிருந்து பரிசோதனை மேற்கொள்வர். 
பொதுமக்கள் இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com